ADDED : நவ 20, 2026 11:05 PM
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில், இன்று (நவ.,20) நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
இதையடுத்து, 600 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 580 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
அய்யப்பன் சீசன் தொடங்கியுள்ளதால், தமிழகம், கேரளாவில் முட்டை நுகர்வு சரிந்துள்ளது. அதனால், கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின், முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து சரிந்து வருவது, பண்ணையாளர்களை கவலையடைய செய்துள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை(காசுகளில்) நிலவரம்:
சென்னை, 670, ஐதராபாத், 630, விஜயவாடா, 620, பர்வாலா, 622, மும்பை, 705, மைசூரு, 660, பெங்களூரு, 660, கொல்கட்டா, 705, டில்லி, 683 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ முட்டைக்கோழி, 85 ரூபாய்; பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 100 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
