தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/முட்டை விலை 8 நாட்களில் ரூ.1 உயர்வு

முட்டை விலை 8 நாட்களில் ரூ.1 உயர்வு

முட்டை விலை 8 நாட்களில் ரூ.1 உயர்வு


ADDED : நவ 06, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், தினமும், 8 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவான நெக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இந்நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில், இன்று (நவ.,6) நடந்தது. இதில், முட்டை கொள்முதல் விலை, மேலும், 10 காசுகள் உயர்த்தப்பட்டு, 670 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

அக்., 21ல், கொள்முதல் விலை, 570 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விலை அதிகரித்து, எட்டு நாட்களில், முட்டை கொள்முதல் விலை, ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. ஜூலை, 23ல் கொள்முதல் விலை, 680 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவே, முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us