யாசகம் எடுத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த முதியவர்
யாசகம் எடுத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த முதியவர்
ADDED : நவ 19, 2024 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: துாத்துக்குடி முதியவர் யாசகம் பெற்ற பணம் 10 ஆயிரம் ரூபாயை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தாங்குளம் தாலுகா ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன், 70; இவர் தற்போது, கடலுார் மாவட்டம், வடலுாரில் தங்கி யாசகம் எடுத்து வருகிறார்.
யாசகம் பெற்ற தொகையில் 10 ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதற்காக நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து, 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார். இவர் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் யாசகம் பெற்ற தொகையை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.

