உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 24, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, ஏரியில் மூழ்கி, குப்பன், 75, என்பவர் பலியானார்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். விவசாயியான இவர், நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் மாடு மேய்க்க சென்றார்.
மாலையில் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடி சென்றபோது, குப்பன் கால் தவறி அருகில் உள்ள ஏரியில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து, ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
