தேர்தல் ஆலோசனை கூட்டம்: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தேர்தல் ஆலோசனை கூட்டம்: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ADDED : ஜன 08, 2024 06:09 AM
சென்னை : தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடப்பதாக இருந்த, தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் பணி குறித்து ஆலோசிப்பதற்காக, தேர்தல் கமிஷனர்கள் நேற்று மாலை சென்னை வருவதாக இருந்தது. இன்றும், நாளையும், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்களுடன், தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில், மழை பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் நேற்று துவங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் நடக்கிறது. எனவே, தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வெளியிட்டார்.