ADDED : மார் 12, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜோதி நிர்மலாசாமி நேற்று பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார், கடந்த 9ம் தேதி ஓய்வு பெற்றார்.
அதைத்தொடர்ந்து, புதிய மாநில தேர்தல் ஆணையராக, தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக இருந்த ஜோதி நிர்மலாசாமி, நேற்று பொறுப்பேற்றார்.
இவர் மே மாதம் ஐ.ஏ.எஸ்., பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று உள்ளார்.
இப்பதவியில் ஐந்து ஆண்டுகள் இருப்பார்.

