மொபைல் போன் வைக்க ஏற்பாடு தேர்தல் கமிஷன் புதிய நடைமுறை
மொபைல் போன் வைக்க ஏற்பாடு தேர்தல் கமிஷன் புதிய நடைமுறை
ADDED : ஏப் 24, 2026 04:24 AM
சென்னை: வாக்காளர்களின் மொபைல் போன்களை வைப்பதற்கு புதிய நடைமுறையை, தேர்தல் கமிஷன் செயல்படுத்தி, சர்ச்சைகளை தவிர்த்துள்ளது.
ஓட்டுச்சாவடிகளுக்கு மொபைல் போன்களுடன் வரும் வாக்காளர்கள், தாங்கள் ஓட்டளிப்பதை புகைப்படம், வீடியோ எடுத்து வெளியிடுவது, கடந்த தேர்தல்களில் அதிகரித்தது. இதனால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்பட்டன.
இதையடுத்து, நேற்று நடந்த தேர்தலில், ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்து செல்வதற்கு வாக்காளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஓட்டுச்சாவடிக்கு வெளியே, பல அறைகளுடன் தைக்கப்பட்ட பைகள் தொங்க விடப்பட்டு இருந்தன. வாக்காளர்களிடம் மொபைல் போன்களை பெற்று, 'டோக்கன்' கொடுக்கப்பட்டது. பையில் அந்த டோக்கன் எண்ணுள்ள அறையில், மொபைல் போன் பாதுகாக்கப்பட்டது. ஓட்டளித்து விட்டு வெளியே வந்து டோக்கனை கொடுத்தவுடன், வாக்காளர்களுக்கு மொபைல் போன் திருப்பித் தரப்பட்டது.
தேர்தல் கமிஷனின் இந்த நடைமுறையால், சமூக வலைதளங்களில் தேவையற்ற சர்ச்சைகள், பதிவுகள் தவிர்க்கப்பட்டன.
