ADDED : மார் 19, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:கொ.ம.தே.க., பொதுச்செயலர் உள்ளிட்ட, 250 பேர் மீது, தேர்தல் விதிமீறியதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம், ஈரோடு அருகே திண்டலில் ஒரு பஞ்சாபி ஹோட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் நாமக்கல் லோக்சபா தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
இதில், தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்ததாக, ஈரோடு தாலுகா போலீசில் பறக்கும் பறக்கும்படை 1 - சி அலுவலர் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் கொ.ம.தே.க., பொதுச்செயலர் ஈஸ்வரன் தலைமையிலான, 250 பேர் மீது ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

