தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

 நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

 நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு


ADDED : ஏப் 23, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: தேர்தல் விதிகளை மீறியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. அன்றைய தினம் மாலை 6:00 மணிக்குள் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டுஇருந்தது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, 6:05 மணிக்கு மேல் ஆகியும் சீமான் தன் பேச்சை முடிக்கவில்லை.

இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீதும், நா.த.க., நிர்வாகி ரவிச்சந்திரன் மீதும், காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us