தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தம் நாளை ஆலோசனை


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில், 2025ம் ஆண்டு இறுதியில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகள் நடந்தன. இதில், 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, நவம்பர் மாதம் மீண்டும் துவங்கப்பட உள்ளது. இதற்காக ஓட்டுச்சாவடிகளை சீரமைக்கும் பணிகள், அடுத்த மாதம் 2ம் தேதி மேற்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல், 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக, நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல், 2027 ஜனவரி 4ம் தேதி வெளியிடப்படும்.

இதற்காக சிறப்பு முகாம்களை நடத்தவும், தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us