மின் வாகனத்திற்கு 'சார்ஜிங்' மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது
மின் வாகனத்திற்கு 'சார்ஜிங்' மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது
ADDED : ஏப் 22, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை மேம்பால ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினசரி 80,000 - 1,00,000 பேர் பயணம் செய்து வருகின்றனர்.
மொத்தம் 14 ரயில் நிலையங்கள் உள்ளன. பயணியர் வசதிக்காக, அனைத்து ரயில் நிலையங்களிலும், மின்சார பைக் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் பணிகள் முழுதும் முடிவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

