ADDED : நவ 07, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக மின் வாரிய பிரிவு அலுவலகங்கள்,மின் கட்டண மையங்களுக்கு, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் எப்போதும் விடுமுறை.
தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான இம்மாதம் 1ம் தேதி, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், அதை ஈடுசெய்யும் வகையில், வரும் 9ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுள்ளது.
தமிழக மின் நுகர்வோர் எண்ணிக்கை, 1 கோடி. இவர்களில், கட்டண மையங்களுக்கு நேரில் வருவோர் எண்ணிக்கை, 30 முதல் 40 லட்சம் பேர் வரை.

