ADDED : செப் 09, 2025 03:07 AM

சென்னை : மின் வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கேங்மேன் பதவியில், 9,600 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, சீனியர் கேங்மேன், தலைமை கேங்மேன் ஆகிய பதவி உயர்வுகள் மட்டுமே கிடைக்கும்.
நேரடியாக, கள உதவியாளராக பணியில் சேருவோர், துறை ரீதியான தேர்வில் பங்கேற்று, பல பதவி உயர்வுகளை பெற முடியும்.
எனவே, ஏற்கனவே கேங்மேன் பணியில் உள்ளவர்களை, கள உதவியாளர்களாக அறிவிப்பதுடன், பணி வரன்முறை செய்ய வேண்டும்.
இந்த பணி முடிந்த பின் தான், கள உதவியாளர் பதவிக்கு, நேரடியாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். 1,850 கள உதவியாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மின் வாரியத்தில், 'கேங்மேன்' பதவியில் பணிபுரிவோர், நேற்று சென்னை மின்வாரிய தலைமை அலுவ லகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.