ADDED : மார் 30, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக 16,000 மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி கடந்த ஆண்டு மே 2ம் தேதி 20,830 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.
இம்மாதம் துவக்கத்தில் இருந்து வெயில் கடுமையாக உள்ளதால் தினசரி மின் தேவை 18,000 மெகாவாட் --- 18,500 மெகா வாட் வரை இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 19,000 மெகாவாட்டை எட்டியது. இதுவே இந்த ஆண்டில் இதுவரை அதிகபட்ச அளவு. இதே அளவுக்கு மின் உற்பத்தி மின் கொள்முதல் இருந்ததால் மின்பற்றாக்குறை ஏற்படவில்லை.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவை 22,000 மெகா வாட்டை எட்டும் என மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது.