தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கொளுத்தும் வெயிலால் எகிறும் மின் நுகர்வு

 கொளுத்தும் வெயிலால் எகிறும் மின் நுகர்வு

 கொளுத்தும் வெயிலால் எகிறும் மின் நுகர்வு


ADDED : ஏப் 24, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் மின் நுகர்வு, 46.61 கோடி யூனிட்களாக அதிகரித்து, உச்சத்தை எட்டியுள்ளது.

மாநிலம் முழுதும் ஒரு நாள் அதாவது, 24 மணி நேரமும் பயன்படுத்தப்படும் மின்சார அளவு, மின் நுகர்வு எனப்படுகிறது.

கடந்த, 2024 ஏப்., 30ல் மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்களாக உயர்ந்தது. அதற்கு அடுத்த ஆண்டு கோடை மழையால், மின் நுகர்வு அதிகரிக்கவில்லை. இந்தாண்டு மார்ச்சில் இரு ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது.

இதனால், வீடுகளில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், சட்டசபை தேர்தல், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட காரணங்களால், மாநிலம் முழுதும் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இம்மாதம், 16ம் தேதி மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவாக, 46.03 கோடி யூனிட்களாக அதிகரித்தது. பின், 18ம் தேதி, 46.20 கோடி யூனிட்களாக உயர்ந்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.

இதனால், இரவில் மட்டுமின்றி, பகலிலும், 'ஏசி' சாதன பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் மின் நுகர்வு, 46.61 கோடி யூனிட்களாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us