உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 11, 2026 06:44 AM

அ நிறம் | அளவு
சென்னை: மின் திருட்டில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து, மின் வாரியம், 1 கோடி ரூபாய் இழப்பீடு வசூலித்துள்ளது.
சென்னை, கோவை, திருப்பூர், சேலம் மேட்டூர், மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மின் திருட்டை தடுக்க, கடந்த ஜன., 16ம் தேதி முதல், 31ம் தேதி வரை, மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, 86 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த நபர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையாக, 99.45 லட்சம் ரூபாயை, அதிகாரிகள் வசூலித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க, 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.
