sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரசவ கால உயிரிழப்புகளை தடுக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை

/

பிரசவ கால உயிரிழப்புகளை தடுக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை

பிரசவ கால உயிரிழப்புகளை தடுக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை

பிரசவ கால உயிரிழப்புகளை தடுக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை


ADDED : அக் 22, 2024 11:56 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க, மாநில பணிக்குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நடந்தது. மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் பிரசவத்தின் போது, ஒரு லட்சம் பேரில், 54 என்ற வகையில் மகப்பேறு இறப்பு விகிதம் உள்ளது. தேசிய அளவில் இது குறைவு என்றாலும், மாநில அளவில், கேரளா 19; மஹாராஷ்டிரா 33; தெலுங்கானா 43; ஆந்திரா 45; ஜார்க் கண்ட் 130; குஜராத் 57 என, மகப்பேறு இறப்பு விகிதம் உள்ளது.

தமிழகத்தில், மகப்பேறு இறப்பு காரணங்களை கண்டறிய, 2004ம் ஆண்டு முதல் தணிக்கை செய்யப்படுகிறது. அதில், பிரசவத்திற்கு பிந்தைய ரத்தப் போக்கால் 20; கர்ப்பகால உயர் ரத்த அழுத்தத்தால் 19; ரத்தத்தில் கிருமித்தொற்று 10; இதய நோயால் 9; கருக்கலைப்பால் 4; பிற நோய்களால் 38 சதவீதம் பேர் இறந்தது தெரியவந்துள்ளது.

மேலும், 74.25 சதவீத மகப்பேறு இறப்புகள், பிரசவத்திற்கு பிந்ைதய காலகட்டத்தில் நடந்துள்ளன. மேலும், 72 சதவீத இறப்புகள் கிராமங்களிலும், 28 சதவீதம் நகரங்களிலும் நடந்துள்ளன. தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, தேனி, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒரு லட்சம் பிரசவங்களில், 55க்கும் மேல் உயிரிழப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

அம்மாவட்டங்களில் மகப்பேறு இறப்பு விகித விபரங்களை, பணிக்குழு ஆய்வு செய்தது. தமிழகத்தில் ஆண்டுக்கு, ஒன்பது லட்சம் பிரசவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 80,000 வரை பிரசவங்கள் நடக்கின்றன.

எனவே, அனைத்து பிரசவங்களும், அதிக ஆபத்து நிறந்தவையாக இருக்கலாம் என்ற வகையில், அனைத்து வசதிகள் இருக்கக்கூடிய இடங்களில் மட்டுமே, பிரசவம் திட்டமிட வேண்டும். தேசிய சுகாதார இயக்க அலுவலகத்தில், அவசர கால கட்டுப்பாட்டு அறை துவக்கப்படும். இதில், மகப்பேறு இறப்புகளை குறைக்க, ஏழு டாக்டர்கள், வல்லுனர்களை கொண்ட பிரத்யேக குழு, 24 மணி நேரமும் செயல்படும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் வாயிலாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில், இறப்பு விகித அளவை, 10க்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us