அவசரகதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
அவசரகதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
ADDED : பிப் 10, 2024 04:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அவசர கதியில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தைத் திறந்து பயணிகளை கடும் சிரமத்திற்கு திமுக அரசு உள்ளாக்கியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், ''கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். பயணிகள் மன நிறைவுடன் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன். எனக் கூறியுள்ளார்.