ADDED : பிப் 14, 2026 07:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசியதாவது:
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு ஆங்கிலம் அவசியம். அவற்றை தமிழில் தர முடியுமா என்றால் முடியும். அதற்கான சூழல் இன்னும் அமையவில்லை என்பது நிஜம். ஆங்கிலத்தில் தொழில் முறை கல்வியை போதிப்பதில் தவறில்லை.
ஆனால், அதை, தாய்மொழியில் விளக்கும் போது, அது மாணவர்களின் உணர்வுடன் கலந்து நீடிக்கும்; அதை, நான் என் மருத்துவ படிப்பின்போதும், பணியின் போதும் உணர்ந்தேன்.
மருத்துவத்தில் உள்ள லத்தீன், கிரேக்க வார்த்தைகளை, தமிழ் வாயிலாகவே புரிந்து கொண்டேன். அதனால், பள்ளிப் பருவத்திலேயே, தமிழில் வாசிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

