ADDED : மே 06, 2025 08:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர், அசோக் நகர் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் வரதராஜன் என்பவரின் வீட்டில் சோதனை நடந்தது. மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, சைதாபேட்டையில் உள்ள தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

