ADDED : பிப் 11, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய போது, 2015 - 17 காலட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுப்பணியில் இருப்போருக்கு, 50.86 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அதேபோல, அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, தனியார் கட்டுமான நிறுவனங்கள், அதன் மேலாளர் வீடுகளில் நேற்று முன்தினம் சோதனை நடத்தியது.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனை, இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த சோதனையில், உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கும் நிலையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

