உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 10, 2026 10:57 PM
ADDED : அக் 10, 2026 09:37 PM

அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: பைக்கில் சென்ற இன்ஜினியர் அய்யப்பன், 34, சாலை தடுப்பு கட்டையில் மோதி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், மேல மருதாநல்லுாரை சேர்ந்தவர் அய்யப்பன், 34; இவர் மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில், இன்ஜினியராக பணிபுரிந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை, காட்டுமன்னார்கோவிலில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார்.
முட்டம் அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புக்கட்டையில் மோதி, அருகில் உள்ள வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து உயிரிழந்தார். காட்டுமன்னார்கோவில் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
