மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.1,500 லஞ்சம்; சிக்கினார் இன்ஜினியர் சிவக்குமார்!
மின் இணைப்பு பெயர் மாற்ற ரூ.1,500 லஞ்சம்; சிக்கினார் இன்ஜினியர் சிவக்குமார்!
UPDATED : பிப் 04, 2025 02:25 PM
ADDED : பிப் 04, 2025 01:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரக மின்வாரிய உதவி பொறியாளர் சிவக்குமார் ரூ.1,500 லஞ்சம் வாங்கியது போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊரக மின்வாரிய உதவி பொறியாளர் ஆக சிவக்குமார் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் மின் இணைப்பு பெயர் மாற்ற கோரியதற்கு, ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக, சிவக்குமார் ரூ.1500 லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.