தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்ஜினியரிங் கல்லுாரி அலுவலர்கள் போராட்டம்

இன்ஜினியரிங் கல்லுாரி அலுவலர்கள் போராட்டம்

இன்ஜினியரிங் கல்லுாரி அலுவலர்கள் போராட்டம்


ADDED : ஜன 21, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் உள்ள, 11 அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பணியாற்றும் தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள், தங்கள், 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து, நேற்று முன்தினம் முதல் வரும், 24ம் தேதி வரை, கருப்பு பட்டை அணிந்து பணி செய்ய உள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி தொழில்நுட்ப அலுவலர் சங்க மாநில தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:

அலுவலர்களின் பதவி மறு சீரமைப்புக்கான அரசாணை, 14 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. கல்லுாரிகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் மட்டுமே உள்ளதால், பணிச்சுமை அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப பணியாளர்களின் பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

கல்வித்தகுதி, ஊதியம், உள்ளிட்டவற்றில் ஏ.ஐ.சி.டி.இ., விதிகளை பின்பற்ற வேண்டும். ஏழுமுறை மனு கொடுத்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. இதை கண்டித்து, திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும் கருப்பு பட்டை அணிந்து பணி செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us