தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு


ADDED : ஜூலை 09, 2024 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2024 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஜூனில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.87 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். 1.55 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றினர்.

இவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தரவரிசை பட்டியல், நாளை இன்ஜினியரிங் கமிட்டியின், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இதில், சமூக ரீதியான இட ஒதுக்கீடு பிரிவு தரவரிசையும், பொது தரவரிசையும் இடம் பெற உள்ளது.

அதேபோல, இன்ஜினியரிங் கவுன்சிலிங் எப்போது துவங்கும்; எந்த, 'கட் ஆப்' மதிப்பெண் உள்ளவருக்கு, எப்போது இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற கால அட்டவணையும், நாளை வெளியிடப்பட உள்ளதாக, இன்ஜினியரிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us