எண்ணூர் எண்ணெய் கசிவு: மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?:பசுமை தீர்ப்பாயம் கேள்வி
எண்ணூர் எண்ணெய் கசிவு: மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?:பசுமை தீர்ப்பாயம் கேள்வி
ADDED : ஜன 11, 2024 05:23 PM

சென்னை: எண்ணூரில் வெள்ள நீரில் எண்ணெய் கசிவு விவகாரத்தில் மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.
திருவொற்றியூரில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள், மழை நீருடன் கலந்து 30,000த்துக்கும் மேற்பட்ட வீடுகளில் படர்ந்து, அங்கு வசிப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியது. எண்ணெய் கசிவிற்கு யார் காரணம் என கண்டறிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், குழு ஒன்றை நியமித்தது.
இந்நிலையில், எண்ணூரில் எண்ணெய் கசிவு கலந்த விவகாரத்தில் மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ‛‛ 1,937 ஊழியர்கள், அதிநவீன இயந்திரங்களுடன் எண்ணெய் கசிவுகள் முழுமையாக அகற்றம் செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் அகற்றப்பட்டாலும் அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும்'' என தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை பிப்.,27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

