தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அரசிடம் அவகாசம் கேட்கும் தொழில் முனைவோர்

 அரசிடம் அவகாசம் கேட்கும் தொழில் முனைவோர்

 அரசிடம் அவகாசம் கேட்கும் தொழில் முனைவோர்


ADDED : ஜூலை 07, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆலை அமைக்க, தொழிற்பேட்டைகளை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.

அதில் மனை வாங்கிய தொழில் முனைவோர், இரு ஆண்டுகளுக்குள் ஆலை அமைத்து, உற்பத்தியை தொடங்க வேண்டும். இல்லையேல், அபராதம் விதிக்கப்படும்.

கடந்த மார்ச்சில் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, பெட்ரோலிய பொருட் களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், இயந்திரங்கள், கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, ஆலைகளுக்கான கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க முடியவில்லை. எனவே, அதற்கான அவகாசத்தை இரு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் முனைவோர் வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us