sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் வெட்ட வெளிச்சம்: இ.பி.எஸ்.,

/

டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் வெட்ட வெளிச்சம்: இ.பி.எஸ்.,

டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் வெட்ட வெளிச்சம்: இ.பி.எஸ்.,

டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., நாடகம் வெட்ட வெளிச்சம்: இ.பி.எஸ்.,

17


ADDED : டிச 25, 2024 12:34 PM

Google News

ADDED : டிச 25, 2024 12:34 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கம், தி.மு.க., அரசின் பொய்களை, நாடகங்களை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

03.10.2023 அன்று தி.மு.க., அரசின் நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்காமல், மாறாக, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமை மாநில அரசுக்கே வழங்கவேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு நாயக்கர்பட்டி சுரங்கத்திற்கான நில தரவுகளை அனுப்பிய தி.மு.க., அரசு, ஏலம் நடத்த எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், '2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் தொடங்கியது முதல் 07.11.2024 அன்று ஏல முடிவு அறிவிக்கும் வரை மாநில அரசிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை' என்று மீண்டும் ஒரு முறை மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்கு இடைப்பட்ட 10 மாதங்களில் ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இதைத் தான் சட்டமன்றத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் தொடர்ந்து நான் சுட்டிக்காட்டி '10 மாதங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அரசாங்கம் தானே நடத்துறீங்க?' என்று விடியா தி.மு.க., அரசை நோக்கி கேட்டுக்கொண்டே இருந்தேன்.

ஆனால், இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், சட்டமன்றத்தில் ஆ, ஊ என்று அமைச்சர் பதற்றத்தில் பேசியும் ,முதல்வர் மடைமாற்ற அரசியலும் மட்டுமே செய்து வந்தனர். தூங்குபவர்களை எழுப்பலாம்; கும்பகர்ணன் போல் தூங்குவதாக நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

உண்மை மீண்டும் அம்பலப்பட்டு இருக்கிறது. மேலூர் மக்களுக்கு தி.மு.க., அரசு இழைத்துள்ள இந்த மாபெரும் துரோகத்திற்கு எனது கடும் கண்டனம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us