தொகுதிப் பங்கீடு குறித்து இபிஎஸ் இடம் பேசவில்லை; சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி
தொகுதிப் பங்கீடு குறித்து இபிஎஸ் இடம் பேசவில்லை; சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி
ADDED : டிச 11, 2025 04:25 PM

சென்னை: கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இபிஎஸ் இடம் ஏதும் பேசவில்லை. சிறப்பாக பொதுக் குழுவை நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-ஐ தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என நேற்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இபிஎஸ் உடன் இன்று நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் சந்திப்பு குறித்து, நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி இருக்கிறார். அதற்காக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக வந்தேன். இபிஎஸ் இடம் வாழ்த்துகளை தெரிவித்தேன்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து ஏதும் பேசவில்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை. பொதுக்குழு நடந்த விபரம் பற்றி பேசினோம். நாளை மறுநாள் டில்லி செல்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

