UPDATED : ஜூலை 27, 2025 07:18 AM
ADDED : ஜூலை 26, 2025 10:43 PM

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் (சனிக்கிழமை ) சந்தித்தார்.
அதிமுக - பாஜ கூட்டணி அமைந்ததும் இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, தனி விமானம் மூலம் இன்றிரவு தூத்துக்குடி வந்தார். பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை அவர் திறந்து வைத்தார். ஆறு வழிச்சாலைகளையும், ரயில் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழா முடிந்த பிறகு ,தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை, கவர்னர் ரவி, அமைச்சர் நேரு, ஜி.கே.வாசன், துரை வைகோ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில், பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்தார். அவருடன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சந்தித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இருவரும் அதிமுக பாஜ கூட்டணியை அறிவித்தனர். இதன் பிறகு பிரதமர் மோடியை இபிஎஸ் சந்திப்பது இதுவேமுதல்முறையாகும்.