sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொட்டும் மழையில் இபிஎஸ், நயினார் பிரசாரம்

/

கொட்டும் மழையில் இபிஎஸ், நயினார் பிரசாரம்

கொட்டும் மழையில் இபிஎஸ், நயினார் பிரசாரம்

கொட்டும் மழையில் இபிஎஸ், நயினார் பிரசாரம்


ADDED : ஆக 04, 2025 09:21 PM

Google News

ADDED : ஆக 04, 2025 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாளையங்கோட்டை: திமுகவில் வாரிசுகளுக்கே பதவி அளிக்கப்படுகிறது, அதிமுக சரியான பாதையில் செல்கிறது என்று பாளையங்கோட்டையில் நடந்த எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசினார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் திருநெல்வேலி தொகுதியில் கொட்டும் மழையில் நனைந்தபடி மக்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அடுத்து பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் பிரதான சாலை மார்க்கெட் அருகே வந்து சேர்ந்தார். இங்கு அவருக்கு புதுமையான வழியில் ட்ரோன் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது முதலில் பேசிய பாஜமாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “புயலாக உருவாச்சே என்ற இபிஎஸ் எழுச்சிப்பயணப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். இபிஎஸ் புயலாக உருவாக இந்த ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளே காரணம். கொட்டும் மழையிலும் மக்கள் நின்று வாழ்த்துகிறார்கள். இன்றைய முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் இருக்கிறார், நாளைய முதல்வர் இபிஎஸ் பாளையங்கோட்டையில் இருக்கிறார். இன்று பாளையங்கோட்டை என்றால் நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டை” என்றார்.

அவரைத் தொடர்ந்து இபிஎஸ், பேசியதாவது:

“திருநெல்வேலி அதிமுக கோட்டை என்று வருணபகவான் அருள்புரிந்து கூறிவிட்டார். பாளையங்கோட்டையிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு நீங்கள் அனுப்பிவைக்கவேண்டும்.

நீங்கள் தான் எஜமானர்கள், கூட்டணி காலத்துக்கேற்ப மாறும், மக்கள் எடுக்கும் முடிவு நிலையானது. உங்கள் முடிவின்படி அதிமுக கூட்டணி வெல்லும்.

சிந்தித்துப் பாருங்கள், 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினோம். திமுகவும் முதலீட்டாளர் மாநாடு நடத்தினேன் என்கிறார்கள் அதற்கு வெள்ளை அறிக்கை கேட்டோம், இதுவரை கிடைக்கலை.

திமுக மத்தியில் 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை ஏன் பயன்படுத்தவில்லை?

நீட் தேர்வு குறித்து வழக்கு நடந்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் ப.சிதம்பரம் இருந்தார். அவரது மனைவி நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடினார். தீர்ப்பு வந்தபிறகு வெளியில் வந்து, 'நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது' என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு பக்கம் அமல்படுத்த வேண்டும் என்று வாதாடுகிறார்கள், இன்னொரு பக்கம் ரத்து என்று நாடகம் ஆடுகிறார்கள். இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்கள் ஆட்சிக்கு வரவேண்டுமா?

2017ல் தான் உதய் மின் திட்டத்தில் ஒப்பந்தம் செய்தோம், தமிழ்நாடு மட்டும் தான் கையெழுத்திடாமல் இருந்தது. அதிலிருக்கும் இரண்டு விதிகளை மாற்றினால் மட்டுமே கையெழுத்திடுவோம் என்று சொல்லிவிட்டோம்.

அதனால் தான் 2017 முதல் 2021 வரை மின் கட்டணம் உயர்த்தவில்லை. திமுக ஆட்சியில் 67% உயர்த்திவிட்டு, அதிமுக ஆட்சியே காரணம் என்று திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்புகிறார்.

திமுகவில் வாரிசுக்குத்தான் பதவி கிடைக்கும். ஸ்டாலின் கட்சி தலைவர், உதயநிதி இளைஞரணி தலைவர், கனிமொழி மகளிரணி தலைவர், முடிஞ்சுபோச்சு, எல்லா பொறுப்பும் குடும்பத்துக்கே போச்சு. அதிமுகவில் அப்படியல்ல சாதாரண கிளைச் செயலாளர்கூட பொதுச்செயலாளர் ஆக முடியும். முதல்வர் ஆக முடியும். அதிமுக சரியான பாதையில் செல்கிறது..

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாபர் அலி தொழுகை முடித்து வீட்டுக்குச் செல்லும் வழியில் படுகொலை செய்தனர். ஒருநாள் முன்பே வலைதளங்களில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். எல்லோரும் பார்த்தனர், முதல்வர் மட்டும் பார்க்கவில்லை. முதல்வர் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம். மக்களைக் காப்பாற்றாத அரசு நமக்குத் தேவையா?

அதிமுக 10 ஆண்டுகால ஆட்சி மீது குற்றமே சுமத்த முடியவில்லை. கூட்டணியை வைத்தே பேசுகிறார். அதை நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அதிமுகதான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும், அதிமுக தான் ஆட்சி அமைக்கும். அப்புறம் எதுக்கு பாஜ பற்றி பேசுறீங்க? எங்களைப் பற்றி விமர்சனம் செய்யுங்கள், நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம். எங்களை பற்றி பேச எந்தத் தகுதியும் முதல்வருக்குக் கிடையாது. ஏனென்றால், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி.

திமுகவின் இந்த ஆட்சி ஊழல் ஆட்சி.

அதிமுக ஆட்சியில் தைப்பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தோம். மீண்டும் அதிமுக மலரும் போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாவிட்டாலும் மனை வாங்கி வீடு கட்டிக்கொடுக்கப்படும். அதிமுகவும் பாஜவும் ஒன்றாகச் சேர்ந்து வென்று ஆட்சி அமைக்கும். அப்போது தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லை என்பதை நிரூபிப்போம்.

இந்த பாளையங்கோட்டை தொகுதியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, கலையரங்கம் மேம்பாடு, பேருந்து நிலையம் மேம்பாடு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், இஸ்லாமியர்களுக்கு தனி மையவாடி, அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரி, புதிய பாலம், 11 பள்ளிகள் தரம் உயர்த்தல், சிமெண்ட் கான்கிரீட் கால்வாய் அமைப்பு என நாங்கள் செய்தவைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

திமுக ஆட்சியில் அவலநிலையைப் பாருங்கள், முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்ட பாளை மார்க்கெட், டவுன் மார்கெட் மிக அதிகம் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் இன்றுவரை மூடிக்கிடக்கிறது. முருகன் குறிச்சி முதல் வண்ணாரப்பேட்டை வரை புதிய சாலை அமைக்க நிலம் எடுக்கப்பட்டது இன்றுவரை சாலை அமைக்கப்படவில்லை. துணை முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட பாளையங்கோட்டை டார்லிங் நகரில் உள்ள 8 உள் விளையாட்டு அரங்குகள் பல மாதமாக பூட்டிக்கிடக்கிறது, முதல்வரால் திறக்கப்பட்ட மேலப்பாளையம் அரசு மருத்துவமனை நீண்டநாட்களாக மூடிக்கிறது.

திருநெல்வேலி மக்களுக்காக 37 கோடியில் அமைக்கப்பட்ட அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை. இவையெல்லாம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றிக் கொடுக்கப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்”

இவ்வாறு இபிஎஸ் பேசினார்.






      Dinamalar
      Follow us