பதவியை மறந்து விமர்சித்தால் தக்க பதிலடி; ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., எச்சரிக்கை
பதவியை மறந்து விமர்சித்தால் தக்க பதிலடி; ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., எச்சரிக்கை
ADDED : நவ 13, 2024 12:22 PM

கோவை: 'எதிர்க்கட்சித் தலைவரை, பதவியை மறந்து ஸ்டாலின் விமர்சிக்கிறார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
கோவையில் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, ஸ்டாலின் தலைமையிலான அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளனர். ஒரு எதிர்க்கட்சித் தலைவரை ஊர்ந்து சென்றார், பறந்து சென்றார், கரப்பான் பூச்சி போல் சென்றார் என்று முதல்வர் ஸ்டாலின் பதவியை மறந்து தன்னிலை மறந்து விமர்சிக்கிறார்.
பதிலடி நிச்சயம்
நாங்கள் யாரையும் தவறாக விமர்சிக்கவில்லை; எங்களைப்பற்றி ஆளும் கட்சியினர் தவறுதலாக விமர்சித்தால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம். ஒரு முதல்வர் தனது பதவியை மறந்து விமர்சனம் செய்யலாமா? பல பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் அறிவிக்கப்படாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் எப்படி ஆய்வு செய்ய முடியும்? மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட தி.மு.க., முயற்சிக்கிறது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

