ADDED : ஜூலை 18, 2025 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வழியாக, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து வரும் 25, ஆக., 1, 8, 15ம் தேதிகளில், இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3:30 மணிக்கு பாட்னா செல்லும்
பாட்னாவில் இருந்து வரும் 28, ஆக., 4, 11, 18ம் தேதிகளில் இரவு 11:45க்கு புறப்பட்டு, அடுத்த நான்காவது நாள் காலை 10:30 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர் வழியாக இந்த ரயில் இயக்கப்படும். முன்பதிவு துவங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.