உயிரியல் பாரம்பரிய தளமாக ஈரோடு எலத்துார் ஏரி அறிவிப்பு
உயிரியல் பாரம்பரிய தளமாக ஈரோடு எலத்துார் ஏரி அறிவிப்பு
ADDED : செப் 01, 2025 11:46 PM

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள எலத்துார் ஏரியை, மூன்றாவது உயிரியல் பாரம்பரிய தளமாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலாசாரம், வரலாறு, பல்லுயிர் போன்றவை இணைந்த இடங்கள், உயிரியல் பாரம்பரிய தளமாக, தமிழக அரசால் அறிவிக்கப்படுகின்றன.
அந்த வகையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி போன்றவை, சில மாதங்களுக்கு முன், உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டன.
அந்த வரிசையில், ஈரோடு மாவட்டம் எலத்துார் ஏரி, மூன்றாவது உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இது தொடர்பான அறிவிப்பை, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார். இந்த ஏரிக்கு, 187 வகையை சேர்ந்த, 5,000 பறவைகள் வந்து செல்கின்றன.
அது மட்டுமல்லாது, 38 தாவர வகைகள், 35 பட்டாம்பூச்சி வகைகள், 12 தட்டான் பூச்சிகள், 12 ஊர்வன, 7 பாலுாட்டிகள், நீர் நில வாழ்வன போன்ற உயிரினங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

