உள்ளடக்கத்திற்கு செல்ல

பிழையின்றி இறப்பு சான்றிதழ்; சிறப்பு தணிக்கை குழு அமைப்பு
பிழையின்றி இறப்பு சான்றிதழ்; சிறப்பு தணிக்கை குழு அமைப்பு
ADDED : மே 27, 2026 07:15 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் இறப்பு சான்றிதழ்களில், 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பிழைகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
அத்துடன், முழுமையற்ற தகவல்கள், தவறான இறப்பு காரணங்கள் என, பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தணிக்கை முறை அவசியமாகிறது.
இதற்காக, ஐ.சி.எம்.ஆர்., - என்.சி.டி.ஐ.ஆர்., போன்ற, மத்திய சுகாதார ஆராய்ச்சி அமைப்புகளின் வழிகாட்டுதல்களின்படி, மருத்துவமனைகள் அளவிலும், மாவட்டம் மற்றும் மாநில அளவிலும், விரிவான தணிக்கை அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்த குழுக்கள், மாதம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இறப்பு பதிவான, 24 மணி நேரத்தில், பிழையில்லாத சான்றிதழ் வழங்கப்படுவதை, உறுதி செய்ய வேண்டும்.
