தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அகஸ்தியர் குறித்த கட்டுரை போட்டி

அகஸ்தியர் குறித்த கட்டுரை போட்டி

அகஸ்தியர் குறித்த கட்டுரை போட்டி


ADDED : ஜன 17, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு:

பதினெண்கீழ் சித்தர்களில் சிறந்தவரான அகஸ்தியர் எழுதிய, 'அகத்தியம்' என்ற இலக்கண நுாலில், இயல், இசை, கூத்து எனும் முத்தமிழுக்கும், இலக்கணம் வகுத்துள்ளார். சித்த மருத்துவம், ஜோதிடம், யோகா, ஞானம், வர்மம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நுால்களையும் எழுதி உள்ளார்.

அவரது சிறப்புகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, 'அருந்தமிழ் கண்ட அகஸ்தியர்' என்ற தலைப்பிலும்; கல்லுாரி மாணவர்களுக்கு, 'அகஸ்தியர் காட்டும் அறிவியல்' என்ற தலைப்பிலும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், கட்டுரை போட்டிகளை நடத்துகிறது.

கட்டுரைகளை, ஐந்து பக்கங்களுக்குள் தட்டச்சு செய்து, தலைமை ஆசிரியர் அல்லது கல்லுாரி முதல்வர் கையொப்பத்துடன், பிப்., 5ம் தேதிக்குள், 'பதிவாளர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை - 600 100' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வாகும் கட்டுரைக்கு முதல் பரிசாக 30,000, இரண்டாம் பரிசாக 20,000, மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, https://cict.in/cict2023/kts/ இணையதளத்தை பார்வையிடவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us