ADDED : டிச 16, 2024 12:45 AM
பெஞ்சல் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி முன் அறிவிப்பு இன்றி திறந்து விடப்பட்டது. அதனால், 15 நாட்கள் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. சாத்தனுார் அணை, நான்கு முறை அறிவிப்பு வெளியிடப்பட்டு திறக்கப்பட்டது. சிலர் அரசியலுக்காக இந்த விஷயத்தில் தவறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறில் பணிகள் மேற்கொள்ள தமிழகத்திற்கு உரிமை, முழு சட்ட பாதுகாப்பும் உள்ளது. மார்க்சிஸ்டோடு தி.மு.க., கூட்டணியாக இருந்தாலும், கேரள அரசோடு, தமிழக உரிமைக்காக போராடுவதில் தவறில்லை. இது, இரு அரசுகளுக்கிடையிலான பிரச்னை. தென் மாவட்ட மக்களின் உரிமையை விட்டுத் தராமல், முழு கொள்ளளவை உயர்த்துவதற்கு முதல்வர் பாடுபடுகிறார். பேபி அணை பலப்படுத்தப்படும். தி.மு.க., ஆட்சியிலேயே நடக்கும். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக ஊராட்சிகள், ஒன்றியங்கள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.
- பெரியசாமி
அமைச்சர், ஊரக உள்ளாட்சி துறை

