கூட்டணிக்கு விஜய் வந்தாலும் பழனிசாமி தான் முதல்வர்
கூட்டணிக்கு விஜய் வந்தாலும் பழனிசாமி தான் முதல்வர்
ADDED : அக் 20, 2025 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நிகழ்ந்த, சம்பவம் தொடர்பாக, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போகப்போக, அந்த சம்பவத்தில் உண்மைகள் வெளிவரும். சி.பி.ஐ., விசாரணை, உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வரும்.
அ.தி.மு.க., கூட்டணிக்கு, த.வெ.க., வந்தாலும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்; அவர் தான் அடுத்த முதல்வராக வருவார். கரூரில், பாதிக்கப்பட்ட மக்களை, விஜய் நேரில் சென்று சந்திக்க வேண்டும்.
- நடிகை கவுதமி
கொள்கை பரப்பு
துணை செயலர்,
அ.தி.மு.க.,