ADDED : நவ 03, 2025 12:32 AM
சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. அதில், கடந்த தேர்தலில் ஓட்டளித்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமல் நீக்கக் கூடாது; வெளிமாநிலத்தில் இருந்து தற்காலிகமாக வந்தவர்களை சேர்க்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் தெரிவித்த பின், அனைத்து கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை நிறுத்திவிட முடியாது.
கூட்டணி கட்சியினரும் அமைச்சரவையில் பங்கு வகிக்க வேண்டும் என்ற ஆசை காங்கிரசுக்கு உண்டு. ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் இடமளிக்கும் ஆந்திர அரசின் மாடல், தமிழகத்திற்கும் பொருந்தும்.
சசிகலா, பன்னீர்செல்வம், செங்கோட்டையன் , தினகரன் இணைந்திருப்பது, தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை. ஆனால், அ.தி.மு.க.,வில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து செல்வது, அக்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- கார்த்தி
காங்., - எம்.பி.,

