ADDED : நவ 03, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் குறைகளை தீர்க்க, ஒருபோதும் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தவில்லை.
ஆனால், தற்போது மட்டும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவது, மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றொரு திசை திருப்பும் நாடகம்.
பல்லாண்டுகளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் நடைபெறுகிறது. ஆனால், ஏதோ அன்னியமானதுபோல பிரதானமாக தி.மு.க., காட்சிப் படுத்துகிறது.
தமிழகத்தில் மழை பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் துயரம் ஆகியவற்றை மறைத்து, குளிர் காய முயற்சிப்பது இனியும் செல்லாது.
தி.மு.க., அரசின் தொடர் திசை திருப்பு நாடகத்தையும், வெற்று விளம்பரத்தையும் பார்த்து பார்த்து சலித்து போன தமிழக மக்கள், இந்த வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்.

