தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இன்றும் நாளையும் வெப்பம் 3 டிகிரி வரை அதிகரிக்கும்

 இன்றும் நாளையும் வெப்பம் 3 டிகிரி வரை அதிகரிக்கும்

 இன்றும் நாளையும் வெப்பம் 3 டிகிரி வரை அதிகரிக்கும்


ADDED : ஆக 30, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சேலம் மாவட்டம் அழகாபுரம், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில், தலா, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில், வளிமண்டல கீழ்மட்டத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இதனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசுவதுடன், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில், சில இடங்களில், இடி மின்னலுடன லேசான மழை பெய்யலாம்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us