தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சினிபிட்ஸ் 1

 சினிபிட்ஸ் 1

 சினிபிட்ஸ் 1


ADDED : ஆக 30, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 11:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெற்றி குவிக்கும் மமிதா!

ஒரு நடுத்தர வயதுள்ள ஆணுக்கும், கல்லுாரியில் பயிலும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலை மையமாகக் கொண்டு உருவான, 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம், சமீபத்தில் மலையாளத்தில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு செப்., 4ல் வெளியாகிறது. கிரிஷ் ஏ.டி., இயக்கியுள்ள இப்படத்தில், நிவின் பாலி, மமிதா பைஜு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தாண்டு விஜய் உடன் 'ஜனநாயகன்' படம், சூர்யாவுடன் 'விஸ்வநாத் அண்டு சன்ஸ்' படங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாட்ரிக் வெற்றியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார் மமிதா பைஜு. இரண்டு படமும், 200 கோடி வசூலை தாண்டிய நிலையில், 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படம் தற்போது, 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.

**

நாகர்ஜுனாவின் 100வது படம்!

நடிகர் நாகர்ஜுனாவின் 100வது படமான, 'கிங் - 100' படத்தை ர.கார்த்திக் இயக்கியுள்ளார். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். நாகர்ஜுனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம், இப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

**

தொடர் ஹிட்டில் 'மீசைய முறுக்கு - 2!'

'மீசைய முறுக்கு' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் இப்படத்தில், ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஆச்சார் என மூன்று நாயகியர் நடித்துள்ளனர். இப்படத்தின், 'ஆரா 10க்கு 10, பப்பாளி பழமே, கோயிந்தம்மா, அடி போடி' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, ஹிட் அடித்த நிலையில் தற்போது 'கலைவாணியே...' பாடலை வெளியிட்டுள்ளனர். இப்படம் செப்., 25ம் தேதி வெளியாகிறது.

**

சிவராஜ்குமாரின் புதிய படம்

கன்னட நடிகர் சிவராஜ்குமார் கதை நாயகனாக நடித்துள்ள, 'ஒரிஜினல் மான்ஸ்டர்' படத்தின் அறிமுக விழா மும்பையில் நேற்று முன்தினம் நடந்தது. இப்படத்தை ஆர்.சந்துரு எழுதி, இயக்கியுள்ளார். இந்த விழாவில் கீதா சிவராஜ்குமார், தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பான் இந்தியா படமாக இதை வெளியிட உள்ளனர்.

---------------------

வீட்டு 'டாக்கீஸ்!'

'டீன்ஏஜ்' வயதினரை நோக்கி, 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்!'

'சன் டிவி' குழுமம், சில நாட்களுக்கு முன், சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ் எனும் மைக்ரோ டிராமா தளத்தை அறிமுகப்படுத்தியது. ஒரிஜினல் தொடர்கள், சர்வதேச டப்பிங் தொடர்கள், படங்கள் உள்ளிட்ட அனைத்தையும், மொபைல் போனில் காண முடியும். இவை அனைத்தும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உள்ளன. பல வெற்றிப்படங்களை, தொடர்ச்சியாக, சுருக்கமான எபிசோட்களாக புதிய வடிவில் வழங்குவது இதன் சிறப்பம்சம்.

நிர்வாக இயக்குனர் காவ்யா மாறன் கூறுகையில், ''சன் நெக்ஸ்ட் செயிலியை பயன்படுத்தும் பார்வையாளர்களை, மேலும் ஈர்க்கும் வகையில் சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஜென்ஸி தலைமுறையினருக்கான புதிய ஒரிஜினல் தொடர்களும் இதில் உள்ளன,'' என்றார்.

**

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது 'டிசி!'

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலருடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமான, 'டிசி' படம் தியேட்டரில் வெளியாகி, 100 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் இப்படம், செப்., 4ம் தேதி அமேசான் ப்ரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி., தளத்தில், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகிறது.

**

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us