இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது: ராகுல்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது: ராகுல்
ADDED : ஏப் 18, 2024 05:52 PM

திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது. ஆனால் பிரதமர் ஒரே நாடு ஒரே மொழி, ஒரே தலைவர் என பேசிவருவது ஆச்சரியமாக இருப்பதாக காங்., எம்.பி., ராகுல் பேசினார்.
கோட்டயம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர், ஒரே மதம் போன்று பிரதமர் மோடி பேசிவருவதை கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழக மக்களை தமிழ் பேசாதீர்கள் என்றோ, கேரள மக்களிடம் மலையாளம் பேசாதீர்கள் என்றோ எப்படி சொல்ல முடியும்? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
எப்போதெல்லாம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் நாட்டை பிளவுப்படுத்துகின்றனர். தற்போது இந்தியாவில் 70 கோடி குடிமக்களிடம் இருக்கும் சொத்துக்கு நிகராக 22 பேரின் சொத்துகள் உள்ளன. நம் விவசாயிகள் உதவிக்காக கதறுகின்றனர், இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாக கூறுகிறீர்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.

