ADDED : ஆக 09, 2024 06:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சகோதரருடன் பிரச்னையா... ஊட்டியில் தன் சகோதரி காளியம்மனுடன் உள்ள மாரியம்மனை வழிபடுங்கள்.
எலுமிச்சை மாலை சாத்தினால் விருப்பம் நிறைவேறும். செவ்வரளி மாலை அணிவித்தால் கிரகதோஷம் விலகும். மஞ்சள் சேலை சாத்தினால் நோய் தீரும். இக்கோயிலில் பிப்ரவரியில் 28 நாள் நடக்கும் தேர்(கார்) திருவிழா சிறப்பானது. இதில் துர்கை, காமாட்சி, பார்வதி, மீனாட்சி, பகவதி என தினமும் ஒரு கோலத்தில் அம்மன் காட்சியளிப்பாள்.வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக் கடனாக தீச்சட்டி ஏந்துகின்றனர். தண்ணீரில் உப்பு கரைவது போல, கஷ்டம் தீர தேரோட்டத்தின் போது உப்பை வீசுகின்றனர்.
எப்படி செல்வது
ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1.5 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு : 0423 - 244 2754

