ADDED : டிச 09, 2024 04:26 AM

சென்னை : கேரளாவில் புதுப்பிக்கப்பட்ட ஈ.வெ.ரா., நினைவகம் மற்றும் நுாலகத்தை, வரும், 12ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற, ஈ.வெ.ராமசாமி நுாற்றாண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, கேரளா மாநிலம் வைக்கம் நகரில் உள்ள, ஈ.வெ.ரா., நினைவகத்தையும், நுாலகத்தையும் புதுப்பிக்க, 8.14 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறையானது, நினைவகம் மற்றும் நுாலகத்தை புதுப்பித்தது.
இவற்றை வரும், 12ம் தேதி காலை, 10:00 மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இவ்விழாவில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, சாமிநாதன் மற்றும் கேரள அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். கேரளா அரசின் தலைமை செயலர் சாரதா முரளிதரன் நன்றியுரை வழங்க உள்ளார்.