அமைச்சர் வழக்கில் 3 மணி நேரம் மாஜி அதிகாரியிடம் விசாரணை
அமைச்சர் வழக்கில் 3 மணி நேரம் மாஜி அதிகாரியிடம் விசாரணை
ADDED : செப் 28, 2024 03:42 AM
துாத்துக்குடி: தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை, துாத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போது, சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சார்பு நீதிபதி பிஸ்மிதா முன்னிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., பெருமாள்சாமியிடம் நேற்று மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குறுக்கு விசாரணை நடந்தது.