'ராஜு வீட்டை முற்றுகையிடுவோம்' முன்னாள் ராணுவத்தினர் மிரட்டல்
'ராஜு வீட்டை முற்றுகையிடுவோம்' முன்னாள் ராணுவத்தினர் மிரட்டல்
ADDED : மே 25, 2025 03:44 AM
திருச்சி: இந்திய ராணுவம், பாக்., பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, பலரும் ராணுவத்தை பாராட்டி வந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து, கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, ராணுவ வீரர்களை விமர்சிப்பது போல கூறிவிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததும், தன் 'எக்ஸ்' தள பக்கத்தில் மன்னிப்பு கோரினார் ராஜு.
ஆனால், அதை ஏற்காத முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்தினர், செல்லுார் ராஜுவை எதிர்த்து, திருச்சியில், சங்கத் தலைவர் நவநீதம் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின், திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற சங்கத்தினர், ராஜு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் நவநீதம் கிருஷ்ணன் கூறுகையில், “ராணுவ வீரர்களை, எந்த இடத்தில் இருந்து அவதுாறாக பேசினாரோ, அதே இடத்திற்கு வந்து நிருபர்கள் மத்தியில் மன்னிப்பு கோர வேண்டும்.
''இல்லையென்றால், அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்,” என்றார்.