ADDED : பிப் 01, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கான, 'பாஸ்டேக்' பயன்படுத்துவோர், தங்களது சுயவிபரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்திஉள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர் குறித்தவிவரங்கள் கே.ஒய்.சி., என்ற பெயரில், 'ஆன்லைன்' வாயிலாகவும், நேரடியாகவும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாஸ்டேக்கில் முழு விவரங்களை பதிவு செய்யாத வாகன உரிமையாளர்கள், ஜனவரி 31ம் தேதிக்குள் அவற்றை பதிவு செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த காலக்கெடு மேலும் ஒரு மாதம்நீட்டிக்கப்பட்டுள்ளது.