ADDED : பிப் 19, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார், : வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 30; பட்டதாரி வாலிபர். இவரது, 'வாட்ஸாப்'புக்கு பணத்தை முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக ஒரு 'லிங்க்' வந்தது.
அதை பதிவிறக்கம் செய்த மகேஷ், அதில் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 6.53 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். உடனடி லாபம் எனக்கூறி, 43,000 ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்ந்தது.
அதன்பிறகு பணத்தை பெற்றவர்களிடம் எந்த தகவலும் வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில், 6.09 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, மகேஷ் அளித்த புகாரின்படி, வேலுார் 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.

