ADDED : செப் 23, 2024 02:50 AM

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள இல்லத்தில் எஸ்றா சற்குணம் வசித்து வந்தார்.
சில தினங்களாக உடல்நலக்குறைவால், தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல், கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன் போன்றவர்களிடம் நெருங்கி பழகியவர்.
தி.மு.க.,மீது தீவிர பற்று கொண்டவர். மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து, தி.மு.க., கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டவர்.
கடந்த ஜூலை 19ல், தன் 86வது பிறந்த நாளை கொண்டாடினார். எஸ்றா சற்குணத்தின் மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால், அவர்கள் தாயகம் திரும்பியதும், உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
எஸ்றா சற்குணம் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.